Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (12:10 IST)
நயன்தாரா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு, இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
 
‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா தயாரிப்பில் இறங்கிய லைகா நிறுவனம், தற்போது ஷங்கர் – ரஜினி கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘2.0’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறது. அத்துடன், ‘இப்படை வெல்லும்’, ‘கரு’, ‘சபாஷ் நாயுடு’ ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறது.
 
இந்நிலையில், அடுத்த படத்தை நயன்தாராவை வைத்து தயாரிக்க இருக்கிறது. டார்க் காமெடி படமான இதற்கு, ‘கோ கோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சன் திலிப்குமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டதுமே தயாரிப்பாளருக்குப் பிடித்துவிட்டதால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங் போகவுள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். யோகி பாபு, காமெடியனாக நடிக்கிறார். இந்தப் படம்,  மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகிறதாம்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments