Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரகாசூரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு… 4 ஆண்டு காத்திருப்புக்கு கிடைத்த பலன்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (15:15 IST)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம்  தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக தடம் பதித்த கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் ஆகியோர் தயாரித்தனர். படப்பிடிப்பு முடிந்தும் கௌதம் மேனனின் பணப் பிரச்சனைகளால் மூன்றாண்டுகளாக இந்தப் படம் இன்னும் ரிலிஸாகாமல் உள்ளது.

இது சம்மந்தமாக கார்த்திக் நரேனுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே கருத்து மோதல்கள் எழுந்தன. ஆனாலும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கௌதம் மேனனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியவில்லை. ஆனாலும் இந்த படம் எப்போது ரிலிஸாகும் என ஆர்வம் ஒரு குறிப்பிட்ட ரசிகர்களிடம் உள்ளது. இந்நிலையில் தமிழில் புதிதாக கால்பதிக்கும் சோனி லைவ்வில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக சோனி லைவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மக்களவையை காலவரையின்றி ஒத்திவைத்த சபாநாயகர்.. குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததா?

கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments