Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !!

J.Durai
செவ்வாய், 23 ஜூலை 2024 (13:58 IST)
நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை  கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர்   வெளியிட்டுள்ளனர்.
 
வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி  வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு புதிரான குறிப்புடன் இந்த  வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில் SJ சூர்யா ஒரு அதிரடியான காவலராக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் அதிகாரமற்ற மக்கள் மீது தனது மேலாதிக்கத்தைக் காட்டுகிறார். இந்த கதையில் நமது பகவான் கிருஷ்ணர் (நானி), தனது சத்யபாமாவுடன் (பிரியங்கா மோகன்), ராவணாசுரனை (SJ சூர்யா) எதிர்கொள்கிறார்.
 
ஆரம்பம் முதல் இறுதி வரை,  பரபர பதட்டத்துடன், வீடியோ ரசிகர்களை முழுவதுமாக கவர்ந்திழுக்கிறது. இது உண்மையில் இரண்டு சக்திவாய்ந்த நபர்களுக்கு இடையிலான போரை காட்டுகிறது. SJ சூர்யா மிரட்டலாக பயமுறுத்தும் அதே நேரத்தில், நானி தனது வலுவான திரைப் ஆளுமையால் பிரமாதப்படுத்துகிறார். இருவரும் தங்கள் ஆற்றல்மிகு நடிப்பால் தீப்பிடிக்க வைக்கிறார்கள். 
 
விவேக் ஆத்ரேயாவின் தனித்துவமான கதை சொல்லல் நம்மை அசத்துகிறது.  நாட் எ டீஸர் எனும் இந்த வீடியோ சொல்லும் கதை மிக சுவாரஸ்யமாக உள்ளது. முரளி ஜியின் ஒளிப்பதிவு கண்களை கொள்ளை கொள்கிறது, அதேசமயம் ஜேக்ஸ் பெஜாய் தனது அழுத்தமான இசைக்கோர்வையில் காட்சிகளை அழகுபடுத்துகிறார். DVV என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பு பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது.
 
நாட் எ டீஸர் எனும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ,  வெகுஜன மக்களை ஈர்க்கும் மாஸ் தன்மையுடன் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் உண்மையான ஆடுபுலி ஆட்டத்தை காண, ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். 
 
இந்த பான் இந்தியா ஆக்சன் அதிரடி-சாகச திரைப்படத்திற்கு கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளார். 
 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு 50 படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பு நிறுவனம்..!

ரெட்ரோ படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சிக்கு ரஜினிக்கு அழைப்பு.. சூர்யாவுக்காக வருவாரா?

கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்குகிறாரா பா ரஞ்சித்?

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments