Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைஞானி இளையராஜாவிற்கு அடுத்த விருது ரெடி!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (20:07 IST)
தெலுங்கு மொழித் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிந்துவிட்ட நிலையில், 2012 மற்றும் 2013ம் ஆண்டுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.


 

சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 6 விருதுகளை ஈகா தட்டிச் சென்றுள்ளது. அதன் இயக்குநர் ராஜமௌலி சிறந்த இயக்குநருக்கான விருதையும், அதில் நடித்த நடிகர் சுதீப் சிறந்த வில்லன் நடிகர் விருதையும் பெறுகின்றனர்.

யெட்டோ வெள்ளிப்போயிந்தி மனசு படத்தில் நடித்த நானி சிறந்த நடிகராகவும், நடிகை சமந்தா சிறந்த நடிகையாகவும் தேர்வாகியுள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா, ஈகா படத்திற்கு இசையமைத்த கீரவாணியுடன் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பகிர்ந்துக் கொள்கிறார்.

2013ஆம் ஆண்டுக்கான சிறந்த தெலுங்குத் திரைப்படமாக மிர்ச்சி விருது பெறுகிறது.சிறந்த நடிகர் பிரபாஸ், சிறந்த நடிகை அஞ்சலி பட்டேல், சிறந்த துணை நடிகை நதியா, சிறந்த துணை நடிகர் பிரகாஷ்ராஜ், சிறந்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் என்று விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments