Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'நம்ம வீட்டு பிள்ளை' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த தகவல்

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (21:14 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் வெள்ளியன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த சிங்கிள் பாடல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் 'எங்க அண்ணன்' என்று தொடங்கும் என்றும்,  இந்த பாடலை நாகேஷ் மற்றும் சுனிதி சவ்கான் ஆகியோர் பாடி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் டி இமான் இசையமைக்கும் இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில் இந்த பாடல் இந்த இருவருக்கும் தான் இருக்கும் என்று தெரிகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரின் ஸ்டில் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
சிவகார்த்திகேயன், இமான், விக்னேஷ்சிவன் மற்றும் பாண்டிராஜ் ஆகிய நான்கு பிரபலங்கள் இணைந்துள்ள இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அழகூரில் பூத்தவளே… க்ரீத்தி ஷெட்டியின் வொண்டர்ஃபுல் க்ளிக்ஸ்!

அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடிக்க சம்மதிக்க ஒரே காரணம்தான்.. லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

கொடுத்த பில்ட் அப்புகளுக்கு எதிர்திசையில் வசூல்… சுணக்கம் கண்ட ‘ஹரிஹர வீர மல்லு’!

அவர் இல்லாமல் LCU ஒருநாளும் முழுமை பெறாது- லோகேஷ் கனகராஜ் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments