Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரியா, ஜப்பானை கட்டுப்படுத்தப் போகும் நளினி

கொரியா, ஜப்பானை கட்டுப்படுத்தப் போகும் நளினி
, திங்கள், 20 அக்டோபர் 2014 (12:33 IST)
சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நளினி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் அல்லவா? தேர்வான உடனேயே தலைவருக்கான சுறுசுறுப்பை காட்ட ஆரம்பித்துள்ளார். நளினியின் நான் ஸ்டாப் பிளான்களை கேட்டால் நமக்கே புல்லரிக்கிறது.
சின்னத்திரை நடிகர்களுக்கு சவாலாக இருப்பது இந்தி சீரியல்கள். சில சேனல்கள் இந்தி சீரியல்களை டப் செய்து வெளியிடுகின்றன. விஜய் தொலைக்காட்சி போன்றவற்றில் ஒளிபரப்பாகும் இந்தி டப்பிங் புராண சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கொரியா, ஜப்பான் சீரியல்களைக்கூட தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்களாம் (அப்படியா...?).
 
இந்த சீரியல்களை எல்லாம் கட்டுப்படுத்தப் போகிறாராம் நளினி. முதல்கட்டமாக சம்பந்தப்பட்ட சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இதேபோல் பல அதிரடி திட்டங்களை கைவசம் வைத்துள்ளார். பெரிய திரை நடிகர்கள் சொந்த கட்டிடம் கட்ட திணறிக் கொண்டிருக்கையில் சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்கு ஒரு சொந்தக் கட்டிடம் வாங்கியே தீருவேன் என்றும் சூளுரைத்திருக்கிறார்.
 
அம்மணி... அமர்க்களப்படுத்துங்க.

Share this Story:

Follow Webdunia tamil