Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாயுடு வருவார், ஓட்டு போடுவார்

நாயுடு வருவார், ஓட்டு போடுவார்

நாயுடு வருவார், ஓட்டு போடுவார்
, திங்கள், 2 மே 2016 (17:15 IST)
சபாஷ் நாயுடு படத்தின் தொடக்கவிழா அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த கமல், இந்தமுறை ஓட்டு போடப்போவதில்லை, வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை.


 


தேர்தல் நடக்கும் மே 16 சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பேன் என கூறினார்.
 
அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்று தேர்தல் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்த கமலே, நான் ஓட்டுப்போட போவதில்லை என்று சொன்னது சர்ச்சையானது. அவர் பேட்டியளித்த அன்று மாலையே, கமல் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். அதனால் கமல் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
 
இந்நிலையில், கமல் சார் கண்டிப்பாக வருவார், ஓட்டு போடுவார் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார். கமல் ஓட்டுப் போடுவார் என்பது விஷாலின் நம்பிக்கையா இல்லை கமல் தரப்பிலிருந்து கிடைத்த தகவலை வைத்து அதனை கூறினாரா என்பது தெரியவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி டீசரை கலாய்த்த நெட்டிசன்கள் : கலக்கல் வீடியோ