Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்கி படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தொடங்கும்?.. இயக்குனர் நாக் அஸ்வின் அப்டேட்!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2025 (10:09 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் கடந்த  ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்ததாகப் படக்குழு அறிவித்தது.

அதன் பின்னர் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஷ்யன் மொழியில் டப் செய்யப்பட்டு நவம்பர் 1 ஆம் தேதி ரிலீஸானது.  முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான முன்னோட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் படம் ரிலீஸாகி 8 மாதங்கள் ஆகியும் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்புத் தொடங்கப்படவில்லை. இது குறித்துப் பேசியுள்ள இயக்குனர் நாக் அஸ்வின் “டிசம்பர் மாதம் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல்.. வசூலில் கலக்கும் தனுஷின் ‘குபேரா’!

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி ஒடிஸி’ படத்துக்கு R சான்றிதழ்தான் கிடைக்குமா?... ரசிகர்கள் அதிர்ச்சி

தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.. மருத்துவமனையில் இருந்து நடிகர் பொன்னம்பலம் உருக்கம்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments