நடிகர் சங்க கட்டிட பணிகள்: சிவகார்த்திகேயன் கொடுத்த மிகப்பெரிய நிதியுதவி!

Mahendran
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (17:52 IST)
நடிகர் சங்க கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க கட்டிட பணிக்காக ஒரு பெரிய தொகையை நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சங்க கட்டிட பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட நிலையில் நீதிமன்ற வழக்குகள், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் பிரபல நடிகர்களிடம் ஒரு கோடி ரூபாய் வட்டி இல்லா கடன் வாங்கி, நடிகர் சங்க கட்டிட பணியை முடித்துவிட்டு அதன் பிறகு கிடைக்கும் வருமானத்திலிருந்து கடன் வாங்கியவர்களிடம் திருப்பிக் கொடுக்க திட்டமிடப்பட்டது.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் உட்பட ஒரு சிலர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக தகவல் வெளியான நிலையில் நேற்று இந்த கட்டிடத்தின் பணிகள் ஆரம்பமானது என்பது குறித்த செய்தி வெளியானது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிகர் சங்க  கட்டிட  பணிக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரட்சகன் இரண்டாம் பாகம் எடுக்கப் போறேன்… பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் பிரவீன் காந்தி அறிவிப்பு!

மீண்டும் இணையும் தனுஷ்- சாய் பல்லவி ஜோடி… எந்த படத்தில் தெரியுமா?

என்னை நேஷனல் க்ரஷ்னு சொல்லும் போது மகிழ்ச்சியாகதான் இருக்கு… ஆனா? –ருக்மிணி வசந்த் பதில்!

தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களின் ரன்னிங் டைம் தகவல்!

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படம்: இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

அடுத்த கட்டுரையில்
Show comments