Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானே வருவேன் புது தலைப்பு இதுதான்… செல்வராகவன் செய்த மாற்றம்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (09:43 IST)
நானே வருவேன் திரைப்படத்துக்கு புதிய தலைப்பாக ராயன் என வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார். படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இப்போது படத்தின் கதையே மாற்றப்பட உள்ளதாக மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திட்டமிட்ட தேதியில் படப்பிடிப்பு தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் படத்துக்கு புதிதாக ராயன் என தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் கதைக்களத்தையும் கேங்ஸ்டர் களத்துக்கு மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments