Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்த நாம் தமிழர் கட்சி…

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (22:39 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் தீன தயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துக்ளக் தர்பார். இப்படத்தில் அரசியல் நெடி அதிகமிருப்பதா தகவல் வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் அதை உறுதி செய்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கொடியை ராசிமான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பார்திபன் கிழிப்பது போன்ற காட்சி அக்கட்சியினரை கொதிப்படையச் செய்தது.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குமரன் விஜய் சேதுபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழஒரு அறிக்கை வெளியிட்டுள்ளா சீமான். அதில், நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளாக  இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைத்து, பொருளாதாரத்தை இழந்து இக்காட்சிக்கு உழைத்து வருகின்றனர். இந்நிலையில்  துக்ளக் தர்பார் படத்தின் முன்னோட்ட காட்சியில் வெளியான காட்சிகள் சீமானுக்கு எதிரானதுபோலவும் கட்சியின் கோட்பாடுகளைக் களங்கப்படுவதுபோல் உள்ளது. இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபோது, சிஜி தொழில்நுட்பத்தின் உதவியால் அதை நீக்குவதாகக் கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற காட்சியில் நடித்தவர்களைக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன் ,மஞ்சிமா மோகன் மற்றும் ராஷிகண்ணா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்து உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அடுத்த புத்தாண்டு அல்லது பொங்கலில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments