Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (08:51 IST)
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை லைகா வெளியிட்டது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் நடித்து முடித்துள்ளனர். கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் துரிதமாக நடந்து விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களின் ஏக்கம் வெகுவிரையில் தீரும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் வெளியான பின்னர் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்முறையாக இதிகாச படம் எடுக்க போகும் கிறிஸ்டோபர் நோலன்! படத்தலைப்பை கேட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

தியேட்டர் வாசலில் பெண் இறந்த வழக்கு: காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் ஆஜர்..!

கார்த்தி படத்தின் இயக்குனர்.. சூர்யா படத்தில் நடிகர்… தமிழ் பகிர்ந்த தகவல்!

கங்குவா இரண்டாம் பாகம் வந்தால் அனைவருக்கும் பிடிக்கும்.. படத்தில் நடித்த நடிகர் கருத்து!

கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சினோ… அதுபோல கமர்ஷியல் சினிமாவுக்கு ஷங்கர்- ராம்சரண் புகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments