Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’முத்துக்குமாரின் மூன்றாவது தேசிய விருது களவாடப்பட்டது’ - வைரமுத்து உருக்கம்

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (16:09 IST)
தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது என்று கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள வைரமுத்து, ”இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது.
 
தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர்.
 
"மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு" என்று சொன்னவர், "வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு" என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
 
"உன் சொந்த ஊர் எது தம்பி," என்று ஒருமுறை கேட்டேன். "காஞ்சி அண்ணா," என்று சொன்னார். "அண்ணாவே காஞ்சிதான்" என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். "சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு" என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது.
 
அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும். நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்" என்றார்.

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி!

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments