Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிவாசல் இந்தியாவின் பெருமையாக இருக்கும்… எதிர்பார்ப்பை எகிற வைத்த இயக்குனர் மிஷ்கின்!

vinoth
வியாழன், 2 மே 2024 (08:08 IST)
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை இன்னும் முடிக்கவில்லை. அதனால் வாடிவாசல் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் இப்போது இயக்குனர் வெற்றிமாறனின் நண்பரான மிஷ்கின் வாடிவாசல் படம் குறித்து பேசி எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளார்.

ஒரு திரைப்பட விழா மேடையில் பேசிய மிஷ்கின் “சமீபத்தில் வெற்றிமாறனிடம் பேசினேன். வாடிவாசல் நாவலில் இருந்து திரைப்படமாக்க உள்ள பகுதிகளை படித்துக் காண்பித்தார். வாடிவாசல் இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக வரும். சூப்பர் ஹிட் ஆகும். அந்த படத்துக்கு பிறகு சூர்யா லெஜண்ட் ஆகிவிடுவார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments