Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் சேதுபதி மிஷ்கினின் ‘டிரெய்ன்’ பட ரிலீஸ் எப்போது?

vinoth
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (15:35 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு ’டிரைன்’ என்ற முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்துக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் மிஷ்கின்.

இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார். மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து இந்த படத்துக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடத்த வேண்டியுள்ளதாகவும், அதை முடித்ததும் மார்ச் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது விடுதலை படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் நிலையில் அதை முடித்ததும் மீண்டும் ட்ரெய்ன் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?...வெளியான தகவல்!

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments