Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வினோத் என்னை செருப்பால் அடிச்சிட்டான்… கொட்டுக்காளி டிரைலரை சிலாகித்த மிஷ்கின்!

vinoth
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:01 IST)
கூழாங்கல் படத்தை இயக்கிய பி எஸ் வினோத்ராஜ், தன்னுடைய இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டாக பல சர்வதேச திரைப்பட விழாக்களில்  கொட்டுக்காளி கலந்துகொண்டு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டஇயக்குனர் மிஷ்கின் இயக்குனர் வினோத்ராஜை பாராட்டிப் பேசினார். அப்போது “கூழாங்கல் முடித்ததும் வினோத் ராஜ் என்னைப் பார்த்து கொட்டுக்காளி என்றொரு படம் பண்ணி இருப்பதாக சொன்னான். யாரு இசை என்றேன். யாருமில்லை என்றான். என்ன பைத்தியம் மாதிரி பேசுகிறான் என்று நினைத்தேன். ஆனால் இன்று இந்த டிரைலரைப் பார்த்த போது என்னை அவன் செருப்பால் அடித்துவிட்டான் என்று உணர்கிறேன்.

இதற்கு முன்னர் இளையராஜாவின் காலில் விழுந்து முத்தமிட்டு இருக்கிறேன். இப்போது வினோத் ராஜ் காலில் விழுந்து முத்தமிட தயாராக இருக்கிறேன். இந்த படத்தை ப்ரமோட் செய்ய நிர்வாணமாக ஆட சொன்னாலும் ஆடத் தயார். ஆனால் நான் நிர்வாணமாக ஆடினால் யார் பார்ப்பார்கள்” எனப் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments