Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் இருந்து வந்து பாடிய சித் ஸ்ரீராம் – உச்சி முகர்ந்த மிஷ்கின்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (16:37 IST)
மிஷ்கின் இயக்கிவரும் பிசாசு 2 படத்தில் இருந்து ஒரு பாடலை பாடியுள்ளார் சித் ஸ்ரீராம்.

மிஷ்கின் படங்களில் எப்போதும் இசைக்கு முக்கியத்துவம்  இருக்கும். அதிலும் குறிப்பாக பின்னணி இசை மிகவும் உணர்வுப் பூர்வமாக இருக்கும். அது இளையராஜாவாக இருந்தாலும் சரி, அரோல் கொரோலி மற்றும் கே போன்றவர்களாக இருந்தாலும் சரி… அவர்களிடம் இருந்து தனித்துவமான இசையை வாங்கிவிடுவார் மிஷ்கின். இந்நிலையில் அவரின் பிசாசு 2 படத்துக்கு அவரின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இல்லாமல், அவரின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளார். 

இந்த படத்துக்காக ஏற்கனவே ஒரு பாடலை கார்த்திக் ராஜா பதிவு செய்துவிட்டார். அந்த பாடலை சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி பாடியுள்ளார். அதையடுத்து இரண்டாவது பாடல் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பாடலை பாடுவதற்காக அமெரிக்காவில் இருந்து பாடகர் சித் ஸ்ரீராம் வந்து பாடிக் கொடுத்துள்ளார். அது பற்றி மிஷ்கின் சமூகவலைதளத்தில் ‘இன்று சித் ஸ்ரீராம் எங்கள்' படத்துக்காக பாடல் ஒன்றைப் பாடினார். எந்தப் பாடலைப் பாடினாலும், ஆன்மாவைத் தொடும், அமைதியான ஒரு குரல் அவரிடம் உள்ளது., நீங்கள் எங்களுக்குக் கிடைத்த வரம்" என அவரை பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments