Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் – ஆண்ட்ரியாவின் பிசாசு 2 ரிலீஸ் தள்ளிப் போகிறதா?

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (10:18 IST)
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கபட்டது.

மிஷ்கின்  இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2 .இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்பாகத்தும் இரண்டாம் பாகத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்போது சொன்ன தேதியில் படம் ரிலீஸாகாது என்றே சொல்லப்படுகிறது. ஏனென்றால் இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீடு & டிரைலர் வெளியீடு உள்ளிட்ட எந்த ப்ரமோஷன் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் படம் தள்ளிவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

முன்னதாக  படத்தில் சுமார் 20 நிமிடக் காட்சிகளில ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருப்பதாக படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது அந்த காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்துள்ளார். இது சம்மந்தமாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில் “இப்போது நாங்கள் அந்த காட்சிகளை நீக்கிவிட்டோம். ஏனென்றால் இது ஒரு தாய்க்கும் அவளது மகளுக்கும் இடையிலான கதை. இப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு அந்த படத்தைப் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments