Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஷ்கினின் சவாலுக்கு இதோ ஒரு பதில்

மிஷ்கினின் சவாலுக்கு இதோ ஒரு பதில்
, புதன், 26 நவம்பர் 2014 (09:38 IST)
தராதரம் இல்லாமல் ஒரேவிதமாக அனைத்துப் படங்களையும் தாளித்துவிடுகிறார்கள் இணையத்தில் புழங்குகிறவர்கள். பலநேரம் இது விமர்சனமாக இல்லாமல் அத்துமீறலாகிவிடுவதுண்டு. அப்படி இணைய எழுத்தாளர்களால் அதிகம் காயம்பட்டவர் மிஷ்கின்.
 
அவர் அதுகுறித்து குமுறிக் கொட்டிய வீடியோ இணையத்தில் பரவலான கவனம் பெற்று வருகிறது. இந்தப் படம் அதோட காப்பி இதோட காப்பி என்கிறார்களே, அதேபோல் ஒரு நாவலை இதோட காப்பி அதோட காப்பி என்று இவர்களால் சொல்ல முடியுமா என்று அதில் கேட்டிருந்தார். அவர் வாய் முகூர்த்தம், பிரபல ஆங்கில நாவலாசிரியர் சேத்தன் பகத்தே அந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.
 
சேத்தன் பகத்தின் புதிய நாவலான ஹாஃப் கேர்ள் ப்ரெண்ட் நாவல் தனது நாடகத்தின் அப்பட்ட தழுவல் என பீகாரைச் சேர்ந்த டாக்டர் பீர்பால் ஜா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை  உறுதியான பதில் சேத்தனிடமிருந்து வரவில்லை.
 
சேத்தன் பகத்தின் நாவல்கள்தான் 3 இடியட்ஸ், கை போ சே, 2 ஸ்டேட்ஸ் என்று திரைப்படங்களாகி வசூலை குவித்தன. ஹாஃப் கேர்ள் ப்ரெண்டின் சினிமா உரிமை வாங்க க்யூகட்டி நிற்கையில் பீர்பால் ஜா சேத்தன் காப்பியடிச்சிட்டார் என்ற குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
 
சந்தோஷமா மிஷ்கின் சாப்...?

Share this Story:

Follow Webdunia tamil