Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் படம் ஹவுஸ் ஃபுல்…அனைத்து நெஞ்சங்களுக்க்கும் நன்றி – எஸ்.ஜே.சூர்யா

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (07:54 IST)
செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. ரெஜினா கசாண்ட்ரா, நதிதா ஸ்வேதா ஆகியோர் நடித்து உருவான இந்த படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்பில் இருந்த இந்த படம் எதிர்வரும் மார்ச் 5 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தங்களுக்கு 1.24 கோடி கடன் பாக்கி தர வேண்டியுள்ளதாகவும், அதை தரும் வரையில் படத்தை வெளியிட கூடாது என்றும் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று மாலை உயர்நீதிமன்றம் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது.

எனவே இப்படம் நேற்று உலகமெங்கிலும் ரிலீஸாகவுள்ளது. இதனால் எஸ்.ஜே,சூர்யா மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்நிலையில்  இப்படம் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: நெஞ்சம் மறப்பதில்லை நெல்லை திருநெல்வேலியில் உள்ள அங்கார் தியேட்டரில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கிரேட் ரெஸ்பான்ஸ் உள்ளது. என்னை நடிகனாக அங்கீகரித்துள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் மீடியாக்களுக்கும் எனது அன்பும் நன்றியும்…அருமையான மக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments