Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னுடைய படங்களுக்கு புதுமுக நடிகைகளே போதும்: விஜய் ஆண்டனி

என்னுடைய படங்களுக்கு புதுமுக நடிகைகளே போதும்: விஜய் ஆண்டனி

என்னுடைய படங்களுக்கு புதுமுக நடிகைகளே போதும்: விஜய் ஆண்டனி
, வெள்ளி, 7 அக்டோபர் 2016 (16:49 IST)
முதலில் இசையமைப்பாளராக தொடங்கி பிறகு நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, என்னுடைய படத்திற்கு புதுமுக நடிகைகள் தான் சிறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.


 
 
விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம், இந்தியா பாகிஸ்தான் மற்றும் பிச்சைக்காரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது சைத்தான் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படங்களில் இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகைகளான மஞ்சரி, அக்ஷா பர்தாசனி, சுஷ்மா ராஜ் மற்றும் சாதனா டைட்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் தெலுங்கில் டப் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது.
 
முன்னணி நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பது தொடர்பாக விஜய் ஆண்டனி கூறுகையில், முதலில் பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும்போது அதிக சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கும். இரண்டாவதாக புதுமுக நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க கொடுத்தால், அவர்கள் அதிக கால்ஷீட் கொடுப்பார்கள். என்னுடைய படங்களில் வரும் கதையில், நடிகைகளுக்கு கிளாமரான இமேஜ் எதுவும் கிடையாது. என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெமோ - திரைவிமர்சனம்