Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் இயக்குனர் முத்தையா!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (15:42 IST)
இயக்குனர் முத்தையா தென் தமிழகக் கதைகளன்களை தன்னுடைய படத்தில் எடுத்தாண்டு தொடர்ந்து படங்களைக் கொடுத்து வருகிறார்.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன.

சமீபத்தில் அவர் இயக்கிய விருமன் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து ஆர்யாவை கதாநாயகனாக்கி காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நடந்து வருகிறது.

இதையடுத்து முத்தையா தன்னுடைய மகனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments