மீண்டும் இணையும் மருது கூட்டணி… விஷாலை இயக்கும் முத்தையா!

vinoth
புதன், 1 மே 2024 (08:08 IST)
வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இயக்குனர் முத்தையா கடைசியாக இயக்கிய காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம் படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரிகிடா சகா மற்றும் தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். முத்தையாவின் மற்ற படங்களைப் போலவே மதுரையைக் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பரத் வில்லனாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஷால் துப்பறிவாளன் 2 படத்தை முடித்துவிட்டு வந்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வா வாத்தியார் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடக்கம்… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

சிரஞ்சீவியை விட விஜய்தான் சிறந்த டான்ஸரா?... ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட கீர்த்தி சுரேஷ்!

ரிவால்வர் ரீட்டா ஆக்‌ஷன் படம்தான்… ஆனா குடும்பத்தோட பாக்கலாம் – கீர்த்தி சுரேஷ் உறுதி!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் ‘கைதி 2’ இல்லையா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments