Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைஞானி இளையராஜா இசையில், பாரி இளவழகன் இயக்கத்தில் அடுத்த முயற்சி 'ஜமா'!

J.Durai
வியாழன், 4 ஜூலை 2024 (15:34 IST)
பூர்வீகம் மற்றும் அழகியலை ஆதரிக்கும் திரைப்படங்கள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இதுபோன்ற திரைப்படங்கள் நாடு மற்றும் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டு வருகின்றன. ‘கூழாங்கல்’ திரைப்படத்தை உருவாக்கிய Learn & Teach Productions, தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது.
 
பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
 
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடக்கும்படி படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சில இடங்களில் தெருக்கூத்தின் கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. 
 
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'கூழாங்கல்' படத்தின் தயாரிப்பிற்காக பெயர் பெற்ற Learn and Teach Productions-ன் சாய் தேவானந்த் 'ஜமா' படத்தைத் தயாரித்துள்ளார். முழுப் படமும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக, நிஜ வாழ்க்கை தெரு நாடகக் கலைஞர்கள் படப்பிடிப்பு தொடங்கும் முன் ஒத்திகைக்காக ஈடுபடுத்தப்பட்டனர். பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார். இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது. 'அவதாரம்' படத்திற்குப் பிறகு இந்த வகையான இசையை அவர் மீண்டும் தேர்வு செய்துள்ளார்.
 
பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments