Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையமைப்பாளரைக் கடுப்பேற்றிய தனுஷ் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (16:06 IST)
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன்னைக் கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிவீட் செய்துள்ளார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனுஷின் பவர் பாண்டி படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினார். அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பெரிய வெற்றி பெற்றன. அதனால் தனுஷின் வி ஐ பி 2 படத்திலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த படத்தின் பாடல்கள் மிகவும் சுமார் என்று விமர்சனங்கள் வந்தன. அது சம்மந்தமாக தனுஷ் ரசிகர்கள் அவரைக் கேலி செய்து வந்தனர். மேலும் இனிமேல் தனுஷ் படங்களுக்கு இசையமைக்க வேண்டாம் எனக் கூறிவந்தனர்.

இதுபோல தொடர்ச்சியான பதிவுகளால் கடுப்பான ரோல்டன் ‘விஐபி படத்தின் பணிகள் முடிக்கப்பட எனக்கு 3 நாட்களே கொடுக்கப்பட்டன. தனுஷ் சார் இதைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் சில இதயமில்லாதவர்கள் அதைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவருடன் தனித்துவமான பல படங்களில் தொடர்ந்து பணிபுரியவுள்ளேன்.  ரசிகர்களுக்கு உற்சாகமான இசையைக் கொண்டு வருவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments