Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்

தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் அனிருத்
, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (14:49 IST)
பவன் கல்யாண் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத்.

 
 
தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடித்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதுவரை அவர் இசையமைப்பில் கிட்டத்தட்ட 15 படங்கள் ரிலீஸாகிவிட்டன. ஆனால், எல்லாமே தமிழ்ப் படங்கள்தான். தற்போது கைவசம் 5 படங்களை வைத்திருக்கும் அனிருத், இதுவரை ஒரு பிறமொழி படத்துக்கு கூட இசை அமைத்ததில்லை. 
 
அந்தக் குறையை இப்போது தீர்த்து வைக்கப் போகிறார். திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படத்துக்கு, அனிருத் தான் இசையமைப்பாளர். இந்தப் படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ். ஏற்கெனவே, அவர் நடித்த ‘ரெமோ’ படத்துக்கு  இசையமைத்துள்ள அனிருத், தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர்  அனிருத் இசையில் பாடியது போல, பவன் கல்யாணும் இந்தப் படத்தில் பாடப் போகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? ஸ்ரீதிவ்யா பதில்!!