Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னட இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா சூர்யா?... தயாரிப்பு நிறுவனம் இதுதான்!

vinoth
புதன், 27 நவம்பர் 2024 (08:56 IST)
கங்குவா படுதோல்விக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமிழ், பிரேம்குமார், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு கோடையில் இந்த படம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதன் பிறகு அவர் வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதற்கிடையில் சூர்யா கன்னட இயக்குனர் நர்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை தளபதி 69 படத்தை தயாரிக்கும் படத்தை தயாரிப்பு நிறுவனமான கே வி என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள நர்தன் “என்னுடைய அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments