Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலுக்கு ஜோடியான டப்ஸ்மாஷ் பிரபலம்! ஆச்சர்யத்தில் திரையுலகினர்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:22 IST)
நடிகர் விஷால் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நாயகியாக டப்ஸ்மாஷ் புகழ் மிருனாளினி ரவி நடிக்க உள்ளார்.

விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இருவரும் இரும்புத்திரை படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்தார்

இந்த படத்தின் கதாநாயகியாக டப்ஸ்மாஷ் பிரபலம் மிருனாளினி ரவி நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே விஷால் போன்ற முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்புக் கிடைத்தது குறித்து திரையுலகினர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments