Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சி - நயன்தாரா மோதலில் என்ன நடந்தது? குஷ்பு அளித்த விளக்கத்தால் பரபரப்பு..!

Siva
புதன், 26 மார்ச் 2025 (07:43 IST)
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணையும் ’மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக நயன்தாராவை சுந்தர் சி படத்தில் இருந்து  வெளியேற்றி விட்டதாகவும் ஒரு வதந்தி வைரலாக பரவியது.

முதலில், நயன்தாராவை அடிக்கடி விமர்சிக்கும் ஒரு யூடியூப் சேனல் இந்த வதந்தியை கிளப்பியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், அது சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இதனால், உண்மை என்ன என்ற கேள்வி எழுந்தது.

இந்த விவகாரத்திற்கு நடிகை குஷ்பு நேரடியாக பதிலளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், மூக்குத்தி அம்மன் 2’ பற்றிய தேவையற்ற கதைகள் பரவி வருகின்றன. தயவுசெய்து அவற்றை  யாரும் நம்ப வேண்டாம். படப்பிடிப்பு சுமூகமாக  நடைபெற்று வருகிறது.

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், சுந்தர் சி ஒரு அனுபவம் மிக்க, நேர்மையான இயக்குநர். அதுபோல், நயன்தாராவும் தனது திறமையால் பல கதாபாத்திரங்களை உயிர்ப்பித்த ஒரு திறமைசாலி. மூக்குத்தி அம்மன் கேரக்டர் மீண்டும் அவருக்கு கிடைத்ததில், அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

இந்நிலையில், சிலர் வேண்டுமென்றே வதந்திகளை பரப்பி, சூழ்நிலையை கெடுக்க செய்ய முயலுகிறார்கள். ஆனால் உண்மையான ஆதரவை கொண்டிருக்கும் நீங்கள் போல் இருப்பவர்கள் நம்பிக்கையால் எங்களுக்கே உற்சாகம். உங்கள் அன்பும், ஆசீர்வாதமும் எப்போதும் எங்களுடன் இருப்பதற்காக மனமார்ந்த நன்றி!

தயவு செய்து தவறான தகவல்களை நம்பாதீர்கள்.  மீண்டும் ஒரு மாஸான ஹிட் படத்துடன் திரையரங்கில் உங்களை மகிழ்விக்க, சுந்தர் சி தயாராக இருக்கிறார்!  என குஷ்பு தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்