Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தமில்லாமல் வசூல் சாதனைப் படைக்கும் மோகன்லாலின் ‘துடரும்’… 6 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல்!

vinoth
வியாழன், 1 மே 2025 (06:32 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் பெற்றுள்ளது.

இதையடுத்து மோகன்லால், ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் தருண்மூர்த்தி இயக்கத்தில் உருவான ‘துடரும்’ படம் கடந்த வாரம் ரிலிஸானது. இந்த படத்துக்குப் பெரிய அளவில் எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஆனாலும் முதல் நாள் முதல் காட்சிக்குப் பிறகு படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கள் மூலம் படம் பிக்கப் ஆகத் தொடங்கியுள்ளது.

அதன் காரணமாகக் கேரளாவைத் தாண்டியும் தமிழ்நாட்டிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உலகளவில் இந்த படம் ஆறு நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படம் கேரளாவில் பெற்றுள்ள ஏகோபித்த வரவேற்புக் காரணமாக கேரளாவில் மட்டுமே 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என மலையாளத் திரையுலக வட்டாரத்தில் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments