Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட டைட்டிலை மகனுக்காக தேர்வு செய்த மோகன்லால்

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (22:25 IST)
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால், கடந்த சில ஆண்டுகளாக 'த்ரிஷ்யம்'; உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய ஜீத்துஜோசப் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தார்



 
 
இந்த நிலையில் ப்ரணவ் முதன்முதலாக ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கு விஜய், த்ரிஷா நடித்த 'ஆதி' என்ற படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் சற்று முன்னர் வெளியாகி மலையாள திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மோகன்லால் நடிக்கவுள்ள 'வெளிப்பாடின்டே புஸ்தகம்' என்றா படத்தின் பூஜையின்போது ப்ரணவ்வின் 'ஆதி' மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் புது ஹீரோ ப்ரணவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments