Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிடப்பட்ட 1000 கோடி மெகா பட்ஜெட் படம் – பின்னணி என்ன ?

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (09:08 IST)
சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட மலையாளப்படம் கைவிடப்பட்டுள்ளது.

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய வரலாற்றுப் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்தியா முழுவதும் வரலாற்றுப் படங்கள் அதிகளவில் தயாராகி வருகின்றன. வரலாற்றுப் படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வசூலைக் கொடுப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

அந்த வரிசையில் மகாபாரத்தை பீமனின் பார்வையில் ரண்டமூஷ்டம் என பிரபல மலையாள நாவலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான எம் டி வாசுதேவன் நாயர் எழுதியிருந்தார். அந்த நாவலை அதேப் பெயரில் படமாக்க விரும்பினார் லண்டனைச் சேர்ந்த ஒரு தயாரிப்பாளர். அதற்காக எம்.டி. நாயரே திரைக்கதை எழுதும் பணிக்கும் அமர்த்தப்பட்டார். படத்தில் பீமனாக மோகன்லால் நடிக்க ஒப்பந்தமானார். மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் இந்தியாவின் பல மொழிகளில் உள்ள பிரபலமான நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஸ்ரீரீகுமார் மேனன்  இந்த படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

ஆனால் அறிவித்தப்படி இன்னும் பட வேலைகள் தொடங்காத காரணத்தால் நீதி மன்றத்திற்கு சென்றார் எம்.டி. நாயர். நீதி மன்றத்தில் இந்த படம் கைவிடப்படுவதாக அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி. எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு இடையிலான கருத்து வேறுபாடே இந்த முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பா 2 படத்தில் என் இசை ஏற்கப்படவில்லை… இசையமைப்பாளர் தமன் பகிர்ந்த தகவல்!

நரைத்த முடியுடன் உள்ள நபர் தாலி கட்டினார்.. விஜய் டிவி பிரியங்காவின் 2வது திருமணம்..

Outdated இயக்குனரோடு சேராதீர்கள்… இணையத்தில் எழுந்த கமெண்ட்களுக்கு VJS பதில்!

எனக்கு பாலோயர்கள் இருப்பதால் டிக்கெட் விற்குமா?... சமூக ஊடகங்கள் குறித்து பூஜா ஹெக்டே!

இறுதிகட்ட ஷூட்டுக்காக பாங்காங் பறந்த ‘இட்லி கடை’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments