Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘கர்ணன்’ கேரள ரிலீஸ் உரிமையை பெற்ற மோகன்லால்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (11:10 IST)
தனுஷின் ‘கர்ணன்’ கேரள ரிலீஸ் உரிமையை பெற்ற மோகன்லால்!
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மோகன்லால் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ், மஞ்சுவாரியர் நடித்த அசுரன் திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை மோகன்லால் தான் பெற்று இருந்தார் என்பதும் அந்த படத்தில் மோகன்லாலுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அசுரன் படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர் நடித்து இருந்ததால் துணிந்து அந்த படத்தை மோகன்லால் வாங்கி இருந்தார். அதேபோல் கர்ணன் படத்தில் நாயகி ரஜிஷா விஜயனும் வில்லன் லாலும் கேரளாவில் பிரபலம் என்பதால் கர்ணன் படத்தையும் மோகன்லால் வாங்கி இருப்பதாகவும் கேரளாவில் பிரமாண்டமாக இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

எம் எஸ் பாஸ்கர் சாருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது – இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

கடைசியாக A சான்றிதழ் பெற்ற ரஜினி படம் எது தெரியுமா?... 36 வருடங்களுக்குப் பிறகு ‘கூலி’தான்!

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

அடுத்த கட்டுரையில்
Show comments