Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்கி படத்தில் கமலுக்கு முன்பாக அந்த வேடத்தில் நடிக்க இருந்தது இவரா..? ரிலீஸுக்குப் பிறகு வெளியான தகவல்!

vinoth
புதன், 14 ஆகஸ்ட் 2024 (07:11 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இந்த படத்தில் கமல்ஹாசன் சுப்ரீம் யாஸ்கின் என்ற வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. இரண்டாம் பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கமல் நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலைதான் நடிக்க வைக்க ஆசைப்பட்டனராம் படக்குழுவினர். ஆனால் மார்க்கெட் காரணமாக பின்னர் கமல்ஹாசனைத் தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவங்களுக்கு ஜாதி, மதம் தெரியாது.. பயம்ன்னா என்னன்னே தெரியாது: ‘தேவாரா’ டிரைலர்..!

மெடிக்கல் மிராக்கிள்.. விஜய்யை பார்த்தவுடன் எழுந்து நின்ற மாற்றுத்திறனாளி குழந்தை..!

பிறந்த நாளில் விவாகரத்து மனு தாக்கல் செய்த ஜெயம் ரவி.. ரசிகர்கள் சோகம்..!

காதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு.! விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய ஜெயம் ரவி.!!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments