Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனராக மோகன் லால் அறிமுகமாகும் ‘பரோஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 7 மே 2024 (07:29 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கும் முதல் படமாக ‘பரோஸ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பற்றிய அறிவிப்பு 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டு கொரோனா காரணமாக தள்ளிப்போய் அவ்வப்போது படப்பிடிப்பு நடந்து வந்தது.

இந்த படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருடன்  Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடித்துள்ளார். இந்த படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் சந்தோஷ் சிவன் படமாக்கியுள்ளார். லிடியன் நாதஸ்வரம் இந்த திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் அமெரிக்காவில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தை வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ஓனம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments