கலைஞர் இருந்திருந்தால்.....பரியேறும் பெருமாளைப் பாராட்டிய ஸ்டாலின்

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (10:29 IST)
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஞ்சித் தயாரிப்பில் கதிர், ஆனந்தி, யோகி பாபு நடித்து கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பரியேறும் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தோடு பார்த்து பாராட்டியுள்ளார்.
stalin

சாதிய ஒடுக்குமுறைகளை தோலுரித்து காட்டியதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் சாதி ஒழிப்புக் குறித்த ஒரு விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது பரியேறும் பெருமாள் திரைப்படம்.

மக்கள் வெகுவாக ரசித்து வரும் இந்த திரைப்படத்தை அரசியல் தலைவர்களும் தற்போது வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். சீமான், திருமா வளவன், நல்லக்கண்ணு போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் ஏற்கனவே படத்தைப் பாராட்டியுள்ள நிலையில் தற்போது திமுக தலைவரும் தன் குடும்பத்தோடு இந்த படத்தைப் பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் கலைஞர் இருந்திருந்தால் படத்தை பார்த்து பாராட்டியிருப்பார் என்றும் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது தந்தை ஸ்டாலினோடு படம் பார்த்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன் டிவிட்டரில்’இரட்டை குவளையால் ஊர் என்றும் சேரி என்றும் பிரித்த நிலத்தில் , அதே இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேரும் பெருமாள் " வாழ்த்துகள்’ என தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடவுளின் விதியை மக்கள் மாற்றி எழுதுகின்றனர்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரவீன் பதிவு..!

கிளாமர் லுக்கில் சுண்டியிழுக்கும் ஜான்வி கபூர்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஹோம்லி லுக்கில் அழகிய போஸில் அசத்தும் துஷாரா விஜயன்!

ரஜினிக்காக விஷால் படத்தைத் தள்ளிவைத்த சுந்தர் சி…!

விஜய் சேதுபதி & மிஷ்கினின் ‘டிரெய்ன்’ படத்தின் ரிலீஸுக்குத் தேதி குறிச்சாச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments