Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபி பேஸ்ட் ஒழுங்கா பண்ண மாட்டீங்களா? - விஸ்வாசம் போஸ்டரில் குளறுபடி

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (16:16 IST)
அஜித்தின் விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது. 

 
அந்த போஸ்டர் ஒரு திருவிழா பின்னணியில் தனது புல்லட்டில் மகிழ்ச்சியாக வருவது போலவும் அவருக்குப் பின்னால் மக்கள் சந்தோஷமாக ஆடிப்பாடுவது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. போஸ்டர் வெளியான உடனேயே அஜித் ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
 
ஏற்கனவே, இந்த போஸ்டரில் அஜீத்திற்கு பதிலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வடிவேலுவை வைத்து போட்டோஷாப் செய்து நெட்டிசன்கள் இணையத்தில் உலவ விட்டுள்ளனர்.
 
இந்நிலையில், அசல் போஸ்டரில் சில குளறுபடிகள் நடந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, அந்த போஸ்டரில் இடது ஓரத்தில் உள்ள முதல் நபரை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து அஜித்தின் அருகில் ஒட்ட வைத்துள்ளனர். தெரியக்கூடாது என்பதற்காக அவரின் சட்டை கலரை மட்டும் மாற்றிவிட்டனர். இதில் பரிதாபம் என்னவெனில், அந்த நபருக்கு அருகே ஒருவர் கை தட்டிக்கொண்டிருக்கிறார். அவரின் கையையும் சேர்த்து காப்பி செய்து அஜீத்தின் அருகில் பேஸ்ட் செய்துள்ளனர்.
 
அஜீத் போல் மாஸ் ஹீரோ நடித்துள்ள படம் தொடர்பான போஸ்டரில் அதிக ஆட்களை காட்ட வேண்டும் என்பதற்காக இப்படியா செய்வது எனவும், காப்பி பேஸ்ட் செய்யும் போது ஒழுங்காக செய்ய வேண்டாமா என கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments