ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமியின் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டைட்டில் வெளியீடு

Webdunia
புதன், 8 மே 2019 (08:19 IST)
நடிகை ராய்லட்சுமி நடித்த 'நீயா 2' திரைப்படம் இம்மாதம் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் ஸ்ரீகாந்துடன் நடித்து வந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளிவந்துள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்த படத்திற்கு 'மிருகா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காடுகளின் பின்னணியில் புலி, ராய்லட்சுமியின் ஆவேச தோற்றத்துடன் கூடிய இந்த ஃபர்ஸ்ட்லுக் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
 
ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு பணிகளை பன்னீர்செல்வம் கவனித்து கொள்ள, படத்தை பார்த்திபன் இயக்கியுள்ளார். அருள்தேவ் இசையில் சுதர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வினோத் ஜெயின் தயாரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்சன் கிங் அர்ஜுன்: கராத்தே மாஸ்டராக மிரட்டும் புதிய படம்!

மாரி செல்வராஜின் 'பைசன்' படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? தணிக்கையில் சிக்கல் வருமா?

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுக்க ஆள் இல்லையா? என்ன காரணம்?

பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

அனுபமாவின் லேட்டஸ்ட் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments