Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிருதன் இரண்டாம் பாக வேலைகளைத் தொடங்கிய சக்தி சௌந்தர்ராஜன்..!

vinoth
வியாழன், 18 செப்டம்பர் 2025 (12:33 IST)
நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் மற்றும் டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தர்ராஜன். இந்த படத்தின் இயக்குனர் தான் இயக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களங்களில் வரும்படி இயக்குவார். ஆனால் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கேப்டன் திரைப்படம் படுதோல்வி அடைந்து கேலிகளையும் எதிர்கொண்டது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, லட்சுமி மேனன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மிருதன் தமிழில் முதல் ஸோம்பி வகை திரைப்படமாக இருந்தது. இந்த படம் வந்த போது நல்ல கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது.

தற்போது வரிசையாக தோல்வி படங்களாகக் கொடுத்து வரும் ஜெயம் ரவி தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். அந்த வகையில் மிருதன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவுள்ளனர். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மந்திரமூர்த்தியை சுற்றிய சிக்கல்: 'அயோத்தி' இயக்குநரை விட்டுக்கொடுக்க மறுக்கும் மதுரை அன்பு?

'இட்லி கடை' திரைப்படம்: மாதம்பட்டி ரங்கராஜ் கதையா? படக்குழு அளித்த விளக்கம் என்ன?

பாலிவுட்டிலும் வில்லனாகும் அர்ஜுன் தாஸ்: ரன்வீர் சிங் உடன் மோதுகிறாரா?

’கருப்பு’ படப்பிடிப்பில் ஆர்ஜே பாலாஜிக்கும், திரிஷாவுக்கும் மோதலா? தீயாய் பரவும் வதந்தி..!

சுருள்முடி அழகி அனுபமாவின் அழகிய க்ளிக்ஸ்.. வைரல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments