Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

Siva
புதன், 25 டிசம்பர் 2024 (17:05 IST)
மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது தமிழ் படம் 3 குறித்த அப்டேட்டை அவர் கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் படம் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு தமிழ் படம் 2 வெளியானது. தமிழ் திரை உலகில் உள்ள திரைப்படங்களை கேலி கிண்டல் செய்யும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டது.

இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு காரணம் சி. எஸ். அமுதன் இயக்கம் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த சிவா, தமிழ் படம் 3 குறித்த அப்டேட்டை தெரிவித்தார்.

தமிழ் படம் 3 படத்தை ஒய் நாட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பேசி அதை எடுக்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், "ஒரு கதை எழுதி படம் பண்ணுவது சகஜம், ஆனால் நூறு படங்களை பார்த்து கதை எழுதுவது சவாலான விஷயம்" என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமிழ் படம் 3 குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

என் மகன் இறந்துவிட்டான்.. துயர செய்தி ட்விட்டரில் பகிர்ந்த நடிகை திரிஷா

லப்பர் பந்து படம் மிகச்சிறப்பான படம்… பாராட்டிய மோகன்லால்!

அடுத்த கட்டுரையில்
Show comments