Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்னல் முரளி தமிழ் ரீமேக்… இரண்டு கதாநாயகர்களுக்குள் போட்டி!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (10:05 IST)
மின்னல் முரளி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற இரண்டு தமிழ் கதாநாயகர்களுக்குள் போட்டி எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான மின்னல் முரளி திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இந்தியா தாண்டி உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸில் கடந்த வாரத்தில் உலக டாப் 10 ல் மின்னல் முரளி இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸில் இதுவரை 59.9 லட்சம் மணி நேரம் பார்க்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் எழுந்துள்ளது. தமிழில் இந்த படத்தின் ரீமேக் உரிமையைப் பெற உதயநிதி ஸ்டாலின் ஆர்வமாக உள்ளாராம். அவரின் தயாரிப்பு நிறுவனத்துக்காக வாங்க முயற்சி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே போல இந்த படத்தில் நடிக்க ஜெயம் ரவியின் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments