Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரி எண்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்… ‘ஹரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth
சனி, 11 மே 2024 (11:07 IST)
கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இந்த படத்தில் குஷ்பு மோகனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தனது இளமைக் காலத்திலேயே மென்மையான கதாநாயகனாக நடித்து வந்த மோகன் இப்போது முதல் முறையாக முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய நடிகர் மோகன் ‘ஹரா’ திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார். ஜூன் மாதத்தில் தனுஷின் ராயன் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய பெரிய படங்கள் ரிலிஸாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவை அடுத்து வெங்கல் ராவ் சிகிச்சைக்கு உதவி செய்த தமிழ் நடிகை..!

எமி ஜாக்சன் வைத்த பேச்சிலர் பார்ட்டி.. இரண்டாம் திருமணம் எப்போது?

ரஜினியின் ‘கூலி’ படத்தின் லுக் டெஸ்ட் புகைப்படம்.. ‘காலா’ மாதிரியே இருக்குதே..!

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments