Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

vinoth
சனி, 6 ஜூலை 2024 (07:53 IST)
கன்னடத்தில் இருந்து தமிழ் மொழிக்கு வந்த மோகன் மெல்லிய காதல் படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். 80 களில் அவர் நடித்த பல படங்கள் 175 நாட்களைக் கடந்து ஓடி சாதனைப் படைத்ததால் சில்வர் ஜூப்ளி ஸ்டார் என்ற அடைமொழியோடு வலம் வந்தார். ஆனால் 90 களுக்கு பிறகு அவர் பார்முலா படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போனது. அதனால் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார்.

கடைசியாக அவர் நடித்த சுட்டப்பழம் திரைப்படம் வெளியாகியே 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இப்போது அவர் ஒரு புதுப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படத்துக்கு ஹரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தாதா 89 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இந்த படம் ஜூன் 7 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்துக்காக மோகன் பல இணையதளங்களில் நேர்காணல் கொடுத்திருந்தார். அதன் மூலம் படத்தின் மேல் நல்ல கவனம் கிடைத்தது. ஆனால் படம் பெரியளவில் வசூல் செய்யவில்லை.

இந்நிலையில் ஹரா படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகத் தொடங்கியுள்ளது. திரையரங்கில் கிடைக்காத வரவேற்பு இந்த படத்துக்கு ஓடிடியிலாவது வரவேற்புக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

திடீரென ட்விட்டரை விட்டு விலகிய விக்னேஷ் சிவன்.. நயன்தாரா பிரச்சனை காரணமா?

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments