Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லியில் நடிகை அசின்-ராகுல் சர்மா திருமணம்

டெல்லியில் நடிகை அசின்-ராகுல் சர்மா திருமணம்
, புதன், 20 ஜனவரி 2016 (04:59 IST)
நடிகை அசின்-ராகுல் சர்மா திருமணம் டெல்லியில்  நடைபெற்றது.
 

 
நடிகை அசின் கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார். நடிகை அசின் நடித்த முதல் தமிழ் படம், ஜெயம் ரவியுடன் இணைந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் தான் ஆகும்.
 
தமிழில் சூர்யா, விஜய், அஜித் போன்ற உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, தமிழ் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தார்.
 
நடிகை அசினுக்கு மைக்ரோ மேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவுக்கும் இடையே முதலில் நட்பு ஏற்பட்டு, பின்பு, அது காதலாக மலர்ந்தது. இந்த காதலுக்கு இருவீட்டார்கள் பச்சைக் கொடி காட்டினார்கள்.
 
இதனையடுத்து, காலையில் கிறிஸ்தவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் இரு முறை திருமணம் செய்தனர். சுமார் 50 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil