Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையாகிறார் மைக்கேல் ஜாக்சனின் மகள்

Webdunia
புதன், 3 மே 2017 (07:35 IST)
மைக்கேல் ஜாக்சன் உலகப்புகழ் பெற்ற நடன மேதை என்பது அனைவரும் அறிந்ததே. அவரது நடனத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். அவரே பாடல் எழுதி, அதற்கு அவரே இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் அவரே நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை படைத்து சாதனை புரிந்தவர்



 


இந்நிலையில் கடந்த 2009, ஜூன் 25 அன்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதர் என்ற மகளும் மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர். இவர்களில் பாரிஸ் மைக்கேல் காதர் தற்போது நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

காமெடி மற்றும் த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் அவருடன் பிரபல ஹாலிவுட் நடிகை சார்ஜிஸ் தெரான் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், 2018ஆம் ஆண்டு இறுதியில் இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments