Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்தியின் மெய்யழகன் படக்குழு!

vinoth
வியாழன், 18 ஜூலை 2024 (10:01 IST)
90ஸ் கிட்ஸின் வாழ்க்கையை காட்டும் விதமாக பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான 96 படம் பெரும் ஹிட் அடித்தது. இதையடுத்து அவர் இப்போது கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிரெம்குமார் எழுதி இயக்கும் இந்த படத்தில் கார்த்தியோடு, அரவிந்த்சாமி மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னால் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றது. பழைய படங்களின் போஸ்டர்களை நினைவூட்டும் விதமாக கருப்பு வெள்ளையில் மிக எளிமையாக அந்த போஸ்டர்கள் இருந்ததால் தனித்துக் கவனம் பெற்றன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் ரிலீஸ் தேதியை அறிவித்த ‘குட் பேட் அக்லி’ படக்குழு.. என்ன ஆச்சு விடாமுயற்சி?

அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்..!

'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க  டிஜிட்டல் பிரீமியர் ஸ்ட்ரீமாகவுள்ளது !

“சங்கீதம் இல்லாமல் வாழ்க்கை இல்லை” 'மாத்திக்கலாம் மாலை' ஆல்பம் வெளியீட்டு நிகழ்வில்- சுகாசினி பேச்சு!

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments