இரண்டாம் குத்து போஸ்டரை கிழித்த இளைஞர்கள் – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
சனி, 10 அக்டோபர் 2020 (15:51 IST)
கோவையில் ஆபாசமாக ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன.

சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் பி கிரேட் படத்தைப் போல உருவான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. 2018ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில்  கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் ஓஹோன்னு ஓடியது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரே கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ஆகியவை இன்று மாலை வெளியாக உள்ளன. இதை அறிவிக்கும் போஸ்டர் மற்றும் டீசரைப் படக்குழு வெளியிட பயங்கர எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில் கோவையில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களை இளைஞர்கள் சிலர் கிழித்துள்ளனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பதிவை அழிங்க.. குஷ்புவுக்கு கமல் போட்ட ஆர்டர்.. ‘ரஜினி 173’ல் என்னதான் நடந்தது?

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments