விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இளம் நடிகை

Webdunia
செவ்வாய், 5 நவம்பர் 2019 (22:32 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய்யுடன் நடித்து வரும் ’தளபதி 64’ படம் உள்பட சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மாறி மாறி நடந்து வரும் நிலையில் பிசியாக ஓய்வில்லாமல் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் 
 
இந்த நிலையில் பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்களின் உதவியாளர் ரோகித் இயக்கி வரும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் கொடைக்கானலில் தொடங்கவுள்ளதை அடுத்து அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது
 
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை மேகா ஆகாஷ் என்ற இளம் நடிகை நடிக்கவுள்ளார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் ஒரு சிறு கேரக்டரிலும், தனுஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் சிம்புவின் ’வந்தா ராஜா தான் வருவேன்’ என்ற படத்தின் நாயகியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்பதால் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக மேகா ஆகாஷ் இருப்பார் என்று கருதி அவரை ஒப்பந்தம் செய்ததாக இயக்குனர் ரோஹித் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments