Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயதான நடிகர்களா...? நோ பிராப்ளம்

வயதான நடிகர்களா...? நோ பிராப்ளம்
, புதன், 29 அக்டோபர் 2014 (12:25 IST)
இப்படி சொல்லியிருப்பவர் நடிகை மீரா நந்தன்.
 
வால்மீகி, காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் என்று தமிழில் நடித்த எல்லாப் படங்களிலும் இளம் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த மீரா நந்தன் முதல்முறையாக சரத்குமாருடன் சண்டமாருதம் படத்தில் நடித்து வருகிறார்.
 
சீனியருடன் நடிக்கிறீர்களே இனி இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றால், தமிழ் சினிமாவின் அரிச்சுவடி தெரியாத வெள்ளந்தியாக பேசுகிறார்.
 
மலையாளத்தில் மோகன்லாலுடன் லோக்பால் நடித்தில் நடித்தேன். அதன் பிறகு இளம் நடிகர்கள் பிருத்விராஜ், பஹத் பாசிலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போதெல்லாம் யாரும் சீனியர், ஜுனியர் என்று பார்ப்பதில்லை என பதிலளித்தார்.
 
மீரா நந்தன் மலையாளத்தை வைத்து தமிழை எடை போடுகிறார். அங்கு மோகன்லாலும் மம்முட்டியும் திருமணமாகி குழந்தை பெற்றுக் கொண்ட தேவயானி, மீனாவுடன் நடிக்கின்றனர். ஆனால் தமிழில்...? அறுபது வயது சரத்குமாருக்கு இருபது வயது மீரா நந்தனும், ஓவியாவும்தான் ஜோடியாக முடிகிறது.
 
தப்புக் கணக்கு போட்டுட்டீங்களே அம்மணி.

Share this Story:

Follow Webdunia tamil