Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீராவை நாமினேட் செய்த 11 பேர்! இந்த வாரம் வெளியேறுகிறாரா?

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (07:18 IST)
ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்ற ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தனர். 
 
அவ்வாறு நாமினேட் செய்த வகையில் மீராமிதுனை மட்டும் ஒரு பதினோரு பேர் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் மொத்தமே 14 பேர்கள் தான் உள்ளனர். அவர்களில் மீராவை விட்டு மீதியுள்ள 13 பேர்களில் 11 பேர் நாமினேஷன் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மீராவை லாஸ்லியா, தர்ஷன், முகின், சேரன், சாண்டி, மோகன் வைத்யா, ரேஷ்மா, மதுமிதா, அபிராமி, ஷெரின், கவின் ஆகியோர் நாமினேஷன் செய்தனர்
 
மீராவை அடுத்து சரவணனை மோகன் வைத்யா, ரேஷ்மா, அபிராமி, ஷெரின், தர்ஷன், முகின், சேரன் ஆகிய ஏழு பேர்களும், சேரனை கவின், மீராமிதுன், சாண்டி ஆகிய மூவரும், மோகன் வைத்யாவை சரவணன், லாஸ்லியா ஆகிய இருவரும், அபிராமியை சரவணன், சாக்சி ஆகிய இருவரும் நாமினேஷன் செய்தனர் 
 
இதனை அடுத்து இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் உள்ளவர்கள் மீரா, சரவணன், சேரன் மோகன் வைத்யா, மற்றும் அபிராமி ஆகிய ஐவர் என பிக்பாஸ் அறிவித்தார். பிக்பாஸ் வீட்டில் வனிதாவை அடுத்து அதிக அளவில் வெறுப்பை சம்பாதித்துள்ள மிராமிதுன் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments